Header Ads

Seo Services
ads header

Tumbbad Full Movie in Tamil Dubbed

Tumbbad Full Movie in Tamil Dubbed



படத்தை பற்றிய சில தகவல்கள் 

வெளியான தேதி : அக்டொம்பர் 12, 2018

இயக்குனர் : ஆதேஷ் பிரசாத்

பட்ஜெட் : 5 கோடி

பாக்ஸ் ஆபிஸ் : 13.5 கோடி


படத்தின் கதை

      உலகத்தில் ஒரே ஒரு பெண் கடவுள் மட்டும்தான் இருக்கிறாள். அந்த கடவுள் தானியங்களையும் ( விவசாயம் ), தங்கத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறார். அப்போது அந்த கடவுள் அதாவது தேவிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் பெயர் ஹஸ்தர். ஹஸ்தர் முதலில் தேவிடமிருந்து தங்கத்தை பறித்து தன்னிடம் வைத்துக்கொண்டான். பிறகு தானியத்தையும் பறிக்கலாம் என்று வரும்போது, முக்கோடி தேவர்களும் ஹஸ்தரை தடுத்துவிட்டனர். மேலும் ஹஸ்தரை யாரும் வணங்கக்கூடாது என சாபம் கொடுத்துவிட்டனர். ஆனால் தும்பாட் என்ற இடத்தில் ஹஸ்தருக்கு கோவில் காட்டியுள்ளனர். அந்த சாபத்தால் தும்பாட்டில் விடாமல் மழை பெய்துகொண்டே இருக்கிறது.

    நமது ஹீரோ 12 வயது பையனாக தும்பாட்டில் இருக்கிறார். அந்த இடத்தில பிழைக்க வழியில்லாமல் வேறு ஊருக்கு வந்துவிடுகின்றனர். பிறகு 20 வருடங்கள் வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோ தும்பாட்டுக்கு வருகிறார். அங்கு அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு பாட்டி தங்கத்திற்கு ஆசைப்பட்டு சாகாவரம் போன்ற ஒரு சாபத்தை பெற்று இருந்தார். ஹீரோ அந்த பாட்டியிடம் ஹஸ்தரிடமிருந்த தங்கத்தை எப்படி எடுப்பது என்று கேட்டுக்கொண்டு, ஹஸ்தரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஊருக்கு போகிறார்.

   அதுமட்டுமில்லாமல் ஹஸ்தரிடமிருந்து எப்படி தங்கம் எடுப்பது என்பதை தனது மகனுக்கும் கற்றுக்கொடுக்கிறார். கொஞ்ச வருடங்கள் கழித்து தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு ஹஸ்த்தரிடமிருந்து தங்கம் எடுக்க தும்பாட்டிற்கு போகிறார். அங்கு ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக இருவருமே நூல் இலையில் உயிர் தப்பி ஊருக்கு திரும்புகின்றனர். பொதுவாக ஹீரோ ஒரு தானியத்தை வைத்துதான் ஹஸ்தரிடமிருந்து கொஞ்சம் தங்கத்தை கொண்டுவருவார். ஆனால் நிறைய தானியம் கொண்டு சென்றால் ஹஸ்தர் அதையெல்லாம்  சாப்பிட தாமதமாகும், அந்த நேரத்தில் நிறைய தங்கம் கொண்டு வரலாம் என்று ஹீரோவின் மகன் யோசனை சொல்லுகிறான்.

   அவன் பேச்சைக்கேட்டு ஹீரோவும் 15-க்கும் மேற்பட்ட தானியத்தை அந்த குழியினுள் கொண்டு செல்கிறார். ஆனால் அங்கு இரண்டு தானியத்தை காண்பித்தவுடன் ஒரே மாதிரியான இரண்டு ஹஸ்தர்கள் வந்துவிட்டனர். இது தெரியாமல் பையில் இருந்த அனைத்து தானியத்தையும் ஹீரோவின் மகன் கீழே கொடுக்கிறான். அப்போது அங்கு இருக்கும் தானியங்களின் அளவுக்கு 15 ஹஸ்தர்கள் ஒரே நேரத்தில் வந்துவிட்டனர். எனவே அவர்கள் இருவருமே அந்த குழியிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் ஹீரோ தன்னை தியாகம் செய்துகொண்டு தன் மகனை வெளியே அனுப்புகிறார்.....

இந்த படமும் போன் முட்டை இடும் வாத்து கதையை போலத்தான். பேராசை பெரு நஷ்டமாக மாறிவிட்டது. இந்த படம் தமிழ் மொழியில் உள்ளதால், அனைவரும் தாராளமாக பார்க்கலாம்.

No comments:

Powered by Blogger.